புதன், 28 அக்டோபர், 2015

போட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்?


ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டி முடிவு நாள் நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு நாள்கள் இருக்கையில், போட்டிக்குப் பதிவு எழுதி அனுப்பாதோர் இருப்பின் போட்டியில் பங்கெடுக்கச் சில தகவல் தர விரும்புகின்றேன்.


மேலேயுள்ள நூறு உரூபாய்த் தாள் தான் கவிதைக்கான கருப்பொருள். இந்த நூறு உரூபாய்த் தாளை வைத்து நான் புனைந்த துளிப்பாவைப் (ஹைக்கூவைப்) பாருங்கள்.

அழகான நூறு உரூபாய்த் தாளில்
ஒளிந்திருக்கும் ஓர் உண்மையைப் பார்
"தொழிலாளர்களின் வியர்வை!"

நானொரு கவிதை புனைந்து காட்டிவிட்டேன். இனி உங்கள் புனைவுக் (கற்பனைக்) குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுங்களேன். உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பாவாகப்/ கவிதையாகப் புனைந்து இரண்டு நாட்களில் அனுப்பிவையுங்களேன்.

நானொரு சின்னப்பொடியன் இப்படியொரு துளிப்பாவைப் (ஹைக்கூவைப்) புனையலாம் என்றால், என்னைவிடப் பெரிய அறிஞர்களாகிய உங்களால் எத்தனை எத்தனை பெரிய பாடல்களை / காவியங்களை புனைய முடியுமே! எனவே தான், ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்குமாறு பணிவோடு அழைக்கின்றேன். போட்டி பற்றிய முழு விரிப்பையும் அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

போட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்?
நல்ல கேள்வி தான்.

போட்டிகளில் பங்கெடுத்தால் எமது பதிவோடு மற்றைய அறிஞர்களின் பதிவுகளை ஒப்பிட முடிகிறது. அதனால் எமது புனைவுத் (கற்பனைத்) திறன் எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. மேலும் அடுத்த பதிவுகளில் எமது புனைவுத் (கற்பனைத்) திறனைப் பல மடங்கு பெருக்கிச் சிறந்த பதிவுகளை ஆக்க முடியுமே! எனவே, உடனடியாக ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்குமாறு பணிவோடு அழைக்கின்றேன். 
இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள் உறவுகளே! 

2 கருத்துகள்: