புதன், 23 டிசம்பர், 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-24-12-2015 தொடங்கி 24-01-2016 வரையான காலம் இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

 மற்றவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய தலைப்பு -
பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் 
24-01-2016 ,இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-

21 கருத்துகள்:

 1. போட்டிகள்
  தமிழைப் பேணத் தூண்டும்
  நல்ல தமிழ் பேணும்
  பதிவர்களை அடையாளப்படுத்தும்
  இனிதே இப்போட்டி இடம்பெற
  பதிவர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கிலீஇச் தமிழில் அடித்து அனுப்ப முடியாத ....?
   தமிழ் ரைப் மட்டுமா வரும் ...?

   amma = அம்மா என்று அடித்த தமிழ் வராத ...?

   நீக்கு
 2. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.
  இரவு 1-2 மணிக்குள்தான் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பரிசீலனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா

   கவிதை சமர்ப்பிக்க வேண்டிய காலம் 24-12-2015 தொடக்கம் 24-1-2016 வரையான காலம்
   நான் சொன்னது 24-01-2016 இறுதி நாள். அன்று இரவு 12am கவிதைகள் வந்து சேர வேண்டும் என்பதைத்தான் சொல்லியுள்ளேன் ஐயா...

   -நன்றி-
   --அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. வணக்கம்.
  இரவு 1-2 மணிக்குள்தான் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பரிசீலனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா

   கவிதை சமர்ப்பிக்க வேண்டிய காலம் 24-12-2015 தொடக்கம் 24-1-2016 வரையான காலம்
   நான் சொன்னது 24-01-2016 இறுதி நாள். அன்று இரவு 12am கவிதைகள் வந்து சேர வேண்டும் என்பதைத்தான் சொல்லியுள்ளேன் ஐயா...

   -நன்றி-
   --அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. வாழ்த்துக்கள் அவ்வப்போது போட்டிகள் நடத்தி வலைப்பதிவர்களை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. பொங்கல் போட்டிகளால் வலைத் தமிழ் களை கட்டட்டும்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள்.அனைவரும் கலந்து பரிசினை வென்றிடவும் வாழ்த்துகள்.

  உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் ரூபன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 7. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெறப் போகிறவர்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. ஒரே கருத்து நான்குமுறை பதிவாகிவிட்டதால் நீக்கினேன். தவறுக்கு மன்னிக்கவும். :(

  பதிலளிநீக்கு
 12. ஒரே கருத்து நான்குமுறை பதிவாகிவிட்டதால் நீக்கினேன். தவறுக்கு மன்னிக்கவும். :(

  பதிலளிநீக்கு
 13. தமிழ் வளர்க்க செயல்படும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் =சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஐயா வெளிநாடுகளில் இருந்தும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமா ?

  பதிலளிநீக்கு