புதன், 3 மே, 2017

சித்திரைப் புத்தாண்டு - கவிதைப் போட்டியில் பங்கெடுத்தாச்சா?

இந்தியாவில தமிழ்நாட்டில சித்திரை வெயிலைக் 'கத்திரி வெயில்' என்பார்கள். ஈழத்தில சித்திரை வெயிலைக் 'காண்டாவனம்' என்றும் காண்டாவனத்தில நெருப்புக் கொழுத்திற (நெருப்புக் கொழுத்தினால் வெளிப்படும் வெப்பம்) வெயில் என்பார்கள். அதாவது, பகலவன் (சூரியன்) தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் மேலிருந்து பூமியை நோக்குவதால் தான் இந்நிலை ஏற்படுகிறது. இந்தச் சமகாலச் சூழலை வைத்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி கவிதைப் போட்டி நடாத்துவதாக அறிவித்திருந்தது. போட்டி இறுதி நாள் 10/05/2017, இன்னும் பங்கெடுக்காதோர் இன்றே பங்கெடுக்க வாருங்கள்.


என்னாது.....?
இந்தச் சமகாலச் சூழலை வைத்து கவிதை எழுத முடியாதா?
ஏன் முடியாது?

அம்பாள் நகர் வீதியிலே
அம்பிகா போன்ற அழகிகள்
துள்ளித் திரிவதைப் பார்த்தால்
'கத்திரி வெயில்' காலத்தில
"காலணி இன்றி நடை போடலாமா?" என்று
எண்ணிப் பார்க்க வைக்கிறதே!

கண்ணால் கண்ட காட்சியும் எம்மில் எழுந்த கேள்வியும் இணைய இப்படிக் கவிதை நடை போலக் கிறுக்க முடியாதா? இன்னும் எத்தனை எத்தனை வரிகள் எழுதலாம் பாருங்க...

என்னங்க... இஞ்சாருங்கோ...
யாழ்பாவாணனை பாருங்க...
பத்து மாதப் பிள்ளைத்தாச்சி
வயிற்றைப் போல - தனது
பானை வயிற்றைக் காட்டித் திரியிறாரே!
மேற்சட்டை ஏதும் போடாமலே...
பகலவன் வாட்டி வதைக்க
மேற்சட்டை போட்டால்
வியர்வையால் குளிக்க வேண்டி வருமெனன
அஞ்சியே அப்படித் திரியிறாரே!

சரி! இப்படி எழுத முனையாட்டி, கீழுள்ளவாறு எழுத முனைந்து பாருங்களேன்.

அங்கே பாரு...
உடையை உலர்த்த வெயிலிருக்கு
உடையைக் கழுவ தண்ணீரில்லையே
என்றழுவது சலவைத் தொழிலாளியே!
இங்கே பாரு...
பகலவன் (சூரியன்) வெறித்துப் பார்க்க
பூமித் தண்ணீர் வற்றிப் போக
"நட்ட பயிரு வாடுது
வெட்ட வெளி வயலில
தண்ணீரின்றியே..." என்று
வேழாண்மை செய்வோர் அழுகின்றார்!

சரி! இப்படி எழுத முனையாட்டி, கீழுள்ளவாறு எழுத முனைந்து பாருங்களேன்.

"என்னடி - உன்ர ஆள்
முற்றத்தில தட்டுக் காய விடுறாரு?"
"அவருக்குக் கறி சரியில்லையாமடி
வெயிலில தட்டுக் காய்ந்ததும்
முட்டை பொரிக்கப் போறாராமடி"
சித்திரை வெயில் வாட்டுது
பொண்ணுகள் இப்படிப் பேசுறாங்க!

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!
முயலுங்கள்...
சமகாலச் சூழலை வைத்து
நிறையக் கவிதை எழுதலாம் பாருங்கோ...
அப்ப, கவிதை எழுதத் தொடங்கியாச்சா...?

இப்ப, கிழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் போட்டி ஒழுங்கு முறைகளை படித்த பின், உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்க பார்ப்போம். இறுதி நாள் 10/05/2017, இன்னும் பங்கெடுக்காதோர் இன்றே பங்கெடுக்க வாருங்கள்.

5 கருத்துகள்: