திங்கள், 27 ஜூன், 2016

புதிய ஊற்று - வலைத்திரட்டி விரைவில் வெளிவரும்

இனிய எங்கள் வலையுறவுகளே!
வலைப்பூக்களில் புதிய பதிவுகள் பதியப்பட்டதும் வலைத்திரட்டிகள் ஊடாகப் பரப்புகிறோம். அவ்வகையில் இயங்கி வந்த பல வலைத்திரட்டிகள் இன்று செயலிழந்து விட்டன. ஆயினும், ஊற்று - வலைத்திரட்டி உங்கள் வலைப்பதிவுகளைத் தானியங்கி முறையில் சுடச் சுடத் திரட்டி வழங்கியது. ஊற்று முயன்று வெளிப்படுத்திய திரட்டியில் சில குறைகளும் இருக்கத்தான் செய்தது. அதனைச் சுட்டிக் காட்டிய நட்புகளுக்கு எமது நன்றி.

ஊற்று - வலைத்திரட்டியின் முதற் பதிப்பில் சிறு மாற்றம் (அழகுபடுத்தி) செய்து கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.

ஊற்று - வலைத்திரட்டியின் இரண்டாம் பதிப்பில் வெளியீட்டு விரிப்பில் மாற்றம் செய்து பார்வைக்கு இலகுபடுத்திக் கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.

ஊற்று - வலைத்திரட்டியின் மூன்றாம் பதிப்புப் பல வசதிகள் கொண்ட சிறப்பு வலைத்திரட்டியாக வெளிவர இருக்கிறது. அதுவும் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைச் சுடச் சுடத் திரட்டி வழங்கும் என்பதனைத் தெரிவிக்கின்றோம்.

இனிய எங்கள் வலையுறவுகளே!
எமது முயற்சிகள் வெற்றியடைய உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம். மேற்படி எமது வலைத்திரட்டி முயற்சிகளை உங்கள் நட்புகளுடன் பகிர்ந்து, அவர்களையும் எமது வலைத்திரட்டியில் இணையச் செய்யுங்கள். எமது வலைத்திரட்டியில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி, எமது வலைத்திரட்டியின் அடுத்த பதிப்பினைச் சிறந்த தளமாக வெளியிட உதவுங்கள்.

இவ்வண்ணம்

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

10 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  உறவுகளே தங்களின் கருத்துக்களை நாடுகிறோம்.குறை நிறையை சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 3. தங்களின் போற்றதலுக்குறிய செயலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் போற்றதலுக்குறிய செயலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. 'ஊற்று' என்பது இணையத்தில் செயல்பட்டு வரும் தமிழ் மன்றங்களில் ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன். வலைத்திரட்டியும் நடத்துகிறீர்கள் என இப்பொழுதுதான் தெரிய வந்தது. இதோ, விரைவில் நானும் என் வலைப்பூப் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்கிறேன். இத்தகவலைத் தன் பதிவு மூலம் தெரியப்படுத்திய பதிவர் யாழ்பாவாணன் ஐயா அவர்களுக்கு இங்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்
  அன்புடன்
  வர்மா

  பதிலளிநீக்கு
 8. பதிவுகளை உடனுக்குடன் பகிர்வதற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு