திங்கள், 23 மே, 2016

ஊற்று தன் புதிய பணியில் இறங்கி விட்டது

இனிய வலையுறவுகளே! இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கி, அதன் பின் அவர்கள் வலை வழியே தமிழ் பரப்ப உதவும் கருத்தரங்குகளை உலகளாவ நடாத்தத் திட்டமிட்டோம். அதன்படிக்கு முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கவுள்ளோம். அடுத்து இலங்கையில் திருகோணமலையில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கித் தமிழகமெங்கும் நடாத்த எண்ணி உள்ளோம். இவ்வாறே உலகெங்கும் நடாத்தவுள்ளோம். இதன் மூலம் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் பதிவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் என நம்புகின்றோம்.

எமது கருத்தரங்கு நிகழ்ச்சித் தொகுப்பைக் கீழே பார்க்கவும்.

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கு
1.கணினி அறிமுகம்
2.Html மொழியறிவும் வலைத்தளம் (Web) வடிவமைப்பும்
3.வலைத்தளம் பதிவேற்றல் (Web Hosting), முகவரி சீராக்கல் (Domain Settings)
4.வலைப்பூ (Blog) வடிவமைத்தல்.
5.கருத்துக்களம் (Forum) வடிவமைத்தல்.
6.மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
7.ஊடகங்கள் பற்றிய அறிவு
8.வலைப்பதிவுகளும் கட்டுரைகளும்.
9.நகைச்சுவை, நாடகம், கதைகள் புனைதல்.
10,புதுக்கவிதை, மரபுக்கவிதை, பாடல் புனைதல்.
11.வலை வழியே நற்றமிழ் பேணலாம் வாங்க.
ஏற்பாட்டுக் குழு
'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்


மேற்படி முழு நிகழ்ச்சி நிரலையும் முதன் முதலில் நிகழ்த்த இயலாமையால் முதன் நிகழ்வில் பதிவுகள், வலைப்பூ நுட்பங்கள் பற்றிய கருத்தரங்காகத் தொடங்குகின்றோம். இக்கருத்தரங்கிற்கு அடுத்தாக முழு நிகழ்ச்சி நிரலையும் கொண்ட கருத்தரங்கை நடாத்தவுள்ளோம். அதற்கான அழைப்பிதழைக் கீழே பார்க்கவும்.
எமது இப்பணி உலகெங்கும் வெற்றிகரமாகத் தொடர, தமிழை விரும்பும் (நேசிக்கும்) ஒவ்வொரு உறவுகளது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம். 
இவ்வண்ணம்
ஏற்பாட்டுக் குழு
'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

3 கருத்துகள்:

  1. தங்களது தமிழ்த்தொண்டு வளரட்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. வலைப்பூக்களை நடாத்துவது எப்படி ----> நடத்துவது


    உலகளாவ நடாத்தத் திட்டமிட்டோம் -----> நடத்த

    நடாத்தத் திட்டமிட்டுள்ளோம் -----> நடத்த

    தமிழகமெங்கும் நடாத்த ----->நடத்த

    உலகெங்கும் நடாத்தவுள்ளோம் -----> நடத்தயுள்ளோம்

    பதிலளிநீக்கு