இனிய எங்கள் வலையுறவுகளே!
வலைப்பூக்களில் புதிய பதிவுகள்
பதியப்பட்டதும் வலைத்திரட்டிகள் ஊடாகப் பரப்புகிறோம். அவ்வகையில் இயங்கி வந்த பல வலைத்திரட்டிகள்
இன்று செயலிழந்து விட்டன. ஆயினும், ஊற்று - வலைத்திரட்டி உங்கள் வலைப்பதிவுகளைத் தானியங்கி
முறையில் சுடச் சுடத் திரட்டி வழங்கியது. ஊற்று முயன்று வெளிப்படுத்திய திரட்டியில்
சில குறைகளும் இருக்கத்தான் செய்தது. அதனைச் சுட்டிக் காட்டிய நட்புகளுக்கு எமது நன்றி.
ஊற்று - வலைத்திரட்டியின்
முதற் பதிப்பில் சிறு மாற்றம் (அழகுபடுத்தி) செய்து கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.
ஊற்று - வலைத்திரட்டியின்
இரண்டாம் பதிப்பில் வெளியீட்டு விரிப்பில் மாற்றம் செய்து பார்வைக்கு இலகுபடுத்திக்
கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.
ஊற்று - வலைத்திரட்டியின்
மூன்றாம் பதிப்புப் பல வசதிகள் கொண்ட சிறப்பு வலைத்திரட்டியாக வெளிவர இருக்கிறது. அதுவும்
தானியங்கி முறையில் புதிய பதிவுகளைச் சுடச் சுடத் திரட்டி வழங்கும் என்பதனைத் தெரிவிக்கின்றோம்.
இனிய எங்கள் வலையுறவுகளே!
எமது முயற்சிகள் வெற்றியடைய
உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம். மேற்படி எமது வலைத்திரட்டி முயற்சிகளை உங்கள் நட்புகளுடன்
பகிர்ந்து, அவர்களையும் எமது வலைத்திரட்டியில் இணையச் செய்யுங்கள். எமது வலைத்திரட்டியில்
உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி, எமது வலைத்திரட்டியின் அடுத்த பதிப்பினைச் சிறந்த
தளமாக வெளியிட உதவுங்கள்.
இவ்வண்ணம்
'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள்
மன்றம்