வெள்ளி, 10 நவம்பர், 2017

கற்றலை ஊக்குவிப்போமென ஊற்று செயற்படுகிறது.

மூத்த வலைப்பதிவர்களான ரமணி ஐயா, தனபாலன் ஐயா ஆகியோரது மதியுரைப்படி ரூபன் தலைமையில் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் இயங்குகின்றது. வலைவழியே போட்டிகளை நடாத்தி பரிசில் வழங்குவதோடு நின்று விடாமல் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிகள், படைப்பாக்கப் பயிற்சிகள், மற்றும் கற்றலை ஊக்குவித்தல் எனப் பல பணிகளை ஆற்றுகின்றது. உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண, இப்பணிகளை உலகெங்கும் விரிவுபடுத்தும் நோக்கில் செயற்படுகிறது.

இந்த வகையில் 06-11-2017 திங்கள் அன்று இலங்கை, திருகோணமலை, ஈச்சிலம்பற்று ஸ்ரீசண்பகா மகாவித்தியாலயத்தில் தரம் 05 இல் நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை மதிப்பளித்திருக்கிறது. இந்நிகழ்வை ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையினரும் திருகோணமலை கலாசார திணைக்களத்தினரும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் ஒருங்கிணைந்து நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் ஈச்சிலம்பற்றுக் கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட18 பாடசாலைகளில் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும் 100 புள்ளி எடுத்த மாணவர்களுக்கும் பணப் பரிசும் கற்றல் உபகரணமும் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தரம் 05 மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவித்துப் பாராட்டுதலும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளர்ந்து வரும் இளம் அறிவிப்பாளர் விருதும் பலருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்விற்குச் சிறப்பு அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பல கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு தாமரை வானொலி மற்றும் சக்தி தொலைக்காட்சி ஆகியன ஊடக அனுசரணை வழங்கி ஒத்துழைத்தனர். நிகழ்வில் சிக்கிய ஒளிப்படங்களைக் கீழே பார்க்கலாம்.


தகவல்: யாழ்பாவாணன், செயலாளர், ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்  

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

உ லகம் தழுவிய மா பெரும் கவிதைப் போட்டி வெற்றியாளர்கள்-2017

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள்மன்றத்தினால்

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு உலகம் தழுவிய ரீதியில்நடைபெற்ற கவிதைப் போட்டி வெற்றியாளர்கள்.விபரம்



வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் +4பதக்கம் விரைவில் வந்து சேரும்.

-நன்றி-
-ஊற்று நிருவாகம்-

புதன், 3 மே, 2017

சித்திரைப் புத்தாண்டு - கவிதைப் போட்டியில் பங்கெடுத்தாச்சா?

இந்தியாவில தமிழ்நாட்டில சித்திரை வெயிலைக் 'கத்திரி வெயில்' என்பார்கள். ஈழத்தில சித்திரை வெயிலைக் 'காண்டாவனம்' என்றும் காண்டாவனத்தில நெருப்புக் கொழுத்திற (நெருப்புக் கொழுத்தினால் வெளிப்படும் வெப்பம்) வெயில் என்பார்கள். அதாவது, பகலவன் (சூரியன்) தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் மேலிருந்து பூமியை நோக்குவதால் தான் இந்நிலை ஏற்படுகிறது. இந்தச் சமகாலச் சூழலை வைத்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி கவிதைப் போட்டி நடாத்துவதாக அறிவித்திருந்தது. போட்டி இறுதி நாள் 10/05/2017, இன்னும் பங்கெடுக்காதோர் இன்றே பங்கெடுக்க வாருங்கள்.


என்னாது.....?
இந்தச் சமகாலச் சூழலை வைத்து கவிதை எழுத முடியாதா?
ஏன் முடியாது?

அம்பாள் நகர் வீதியிலே
அம்பிகா போன்ற அழகிகள்
துள்ளித் திரிவதைப் பார்த்தால்
'கத்திரி வெயில்' காலத்தில
"காலணி இன்றி நடை போடலாமா?" என்று
எண்ணிப் பார்க்க வைக்கிறதே!

கண்ணால் கண்ட காட்சியும் எம்மில் எழுந்த கேள்வியும் இணைய இப்படிக் கவிதை நடை போலக் கிறுக்க முடியாதா? இன்னும் எத்தனை எத்தனை வரிகள் எழுதலாம் பாருங்க...

என்னங்க... இஞ்சாருங்கோ...
யாழ்பாவாணனை பாருங்க...
பத்து மாதப் பிள்ளைத்தாச்சி
வயிற்றைப் போல - தனது
பானை வயிற்றைக் காட்டித் திரியிறாரே!
மேற்சட்டை ஏதும் போடாமலே...
பகலவன் வாட்டி வதைக்க
மேற்சட்டை போட்டால்
வியர்வையால் குளிக்க வேண்டி வருமெனன
அஞ்சியே அப்படித் திரியிறாரே!

சரி! இப்படி எழுத முனையாட்டி, கீழுள்ளவாறு எழுத முனைந்து பாருங்களேன்.

அங்கே பாரு...
உடையை உலர்த்த வெயிலிருக்கு
உடையைக் கழுவ தண்ணீரில்லையே
என்றழுவது சலவைத் தொழிலாளியே!
இங்கே பாரு...
பகலவன் (சூரியன்) வெறித்துப் பார்க்க
பூமித் தண்ணீர் வற்றிப் போக
"நட்ட பயிரு வாடுது
வெட்ட வெளி வயலில
தண்ணீரின்றியே..." என்று
வேழாண்மை செய்வோர் அழுகின்றார்!

சரி! இப்படி எழுத முனையாட்டி, கீழுள்ளவாறு எழுத முனைந்து பாருங்களேன்.

"என்னடி - உன்ர ஆள்
முற்றத்தில தட்டுக் காய விடுறாரு?"
"அவருக்குக் கறி சரியில்லையாமடி
வெயிலில தட்டுக் காய்ந்ததும்
முட்டை பொரிக்கப் போறாராமடி"
சித்திரை வெயில் வாட்டுது
பொண்ணுகள் இப்படிப் பேசுறாங்க!

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!
முயலுங்கள்...
சமகாலச் சூழலை வைத்து
நிறையக் கவிதை எழுதலாம் பாருங்கோ...
அப்ப, கவிதை எழுதத் தொடங்கியாச்சா...?

இப்ப, கிழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் போட்டி ஒழுங்கு முறைகளை படித்த பின், உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்க பார்ப்போம். இறுதி நாள் 10/05/2017, இன்னும் பங்கெடுக்காதோர் இன்றே பங்கெடுக்க வாருங்கள்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்


கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 14-04-2017தொடக்கம்10-05-2017 
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி கவிதைக்கான

தலைப்பு -(சித்திரை வெயில் வாட்டுதே.)


போட்டிக்கான நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் 
(இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 
ootru2@gmail.com

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 
பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  
ootru2@gmail.com

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது… கிடைத்தவுடன் மின்னஞ்சல் செய்யவும்
-நன்றி-
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்

-கவிஞர்..ரூபன்-