செவ்வாய், 22 மார்ச், 2016

ஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்!

போட்டி என்றால்
பெரும் சுமையல்ல - சும்மா
பங்கெடுப்பதே வேலை!
பங்கெடுத்துப் பரிசில் பெற்றால்
வெற்றியின் அடையாளம் - ஆனால்
பரிசில் பெறாவிட்டால்
வெற்றியடைய வழியைக் கற்போம் - அதற்காக
தோல்வியடைந்தவர்கள் என்று
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போரே
தோல்வியாளர்கள் என்பேன்!

இப்படியெல்லாம் சொல்லாமலே
போட்டிகளில் பங்கெடுப்போரைப் பாராட்டுவோம்!
இப்படியெல்லாம் சொல்லியும் கூட
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போருக்கு
போட்டி அறிவிப்புகள்
போட்டி பற்றிய தகவல்
எட்டாமல் இருக்கலாம் தானே!

ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
நாட்டுக்கு நாடு செய்தி ஏடுகளில்
வெளிவந்த வண்ணம் இருக்கே...
ஆயினும்,
வலைப்பதிவர்கள் தமது தளத்தில்
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
வெளியிட்டு உதவினால்
போட்டிகளில்
பங்கெடுக்காமல் இருப்போரை
போட்டிகளில் பங்கெடுக்கச் செய்யலாமே!

மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
தங்கள் தளத்தில் பகிர
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றிய
தகவலைப் படிக்க உதவும்
இணைப்பைக் கீழே தருகின்றேன்!

வழி-01


<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYzIWj1EUbm5YxD1gDWW1wME39kOEG5PQQOA2gvfVG_Kv574jgofgheu6HNLQdkkYMws8Q9bj0stNhm6nGXep9LsUmaixzeHw-c1XNQG5lCgQ9GHckGfbEfPkpScxlzVcdw8_gPpFuxhU/s640/kl.jpg" width="200" height="300"></a></p>

வழி-02
http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html

<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html">http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html</a></p>


மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
மேலே தரப்பட்ட நிரலைப் (Code) படியெடுத்துத் தங்கள் தளத்தில் பகிர்ந்து ஒத்துழைப்புச் செய்யுங்கள்.

திங்கள், 7 மார்ச், 2016

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்



கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 08-03-2016தொடக்கம்08-04-2016 
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்போட்டியின் நெறிமுறைகள்.

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 
ootru2@gmail.com
போட்டிக்கான நடுவராக.
1.கவிஞர்.ரமணி(ஐயா)-இந்தியா
2.கவிஞர்..பச்சைப்பாலன்-மலேசியா
3.அறிஞர்.யாழ்பாவாணன்-இலங்கை
4.வலைச்சித்தர்.தனபாலன்-இந்தியா

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் மிக விரைவில் வந்தடையும் வெளியூர் சென்றதனால் தாமதமாகிவிட்டது... உறவுகளே. 

-நன்றி-
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்
-கவிஞர்.த.ரூபன்-

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்.

வணக்கம்
உறவுகளே.
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்றஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் 60 க்கு மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றியுள்ளார்கள் ஒவ்வொரு கவிஞர்களும் மிக அருமையாக தங்களின் கவித்துவத்தை படைத்துள்ளார்கள்அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நடுவர்கள் தெரிவு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தும்திறமையான நடுவர்கள் மிகத் திறமையாக வெற்றியாளர்களை தெரிவு செய்தார்கள்.

அந்த வெற்றியாளர்கள். விபரம் பின்வமாறு.



நடுவராக கடமையாற்றியவர்கள்

கவிஞர்.ரமணி ஐயா-(இந்தியா)
வலைச்சித்தர்.திண்டுகல் .தனபாலன்(இந்தியா)
அறிஞர்.யாழ்பாவானன் (இலங்கை)

மூவருக்கும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர் என்ற வகையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வெற்றி பெற்ற 1ம் இடம்.2ம் இடம்.3ம் .இடம் கவிதைகள் வருமாறு.

1ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.

மடியவில்லை   மனிதநேயம் ;   மண்ணிற்   குள்ளே
            மறைந்திருக்கும்    விதைநீரால்   முளைத்தல்   போன்று
அடித்தபெரு    மழையினாலே    மதங்கள்   சாதி
            அழிந்துநெஞ்சில்    துளிர்ந்ததுவே   அன்பு   நேயம் !
வடிந்திடாமல்    மழைநீர்தாம்   வீதி   சுற்றி
            வழியமைத்து   வீட்டிற்குள்    புகுந்த   போல
இடியோடு    வந்தமழை    அக்கம்   பக்கம்
            இருப்போரை    இணைத்ததுவே    இரக்கம்   ஊட்டி !

பாய்ந்துவந்து   ஏரிநீர்தாம்    சூழ்ந்து   போது
            படகுகளில்   சுற்றிசுற்றி   உதவி   காத்தார்
தீய்த்தபசி    வயிற்றோடு    மாடி   மீது
            தீவாகத்    தவித்தோர்க்கும்    உணவு  ஈந்தார் !

நாட்டுமக்கள்   உள்ளத்துள்   கருணை   ஊறி
            நாற்புறமும்    குவிந்தனவே   பொருள்கள்   வந்து
கேட்குமுன்பே    பணம்உடை   போர்வை   சேர்த்துக்
            கேட்டுகேட்டு    அளித்தார்கள்   பாதித்   தோர்க்கே !

ஏழைபணக்   காரனென்னும்    பேத   மின்றி
ஏந்தியகை    யிலன்பாலே    நிறைத்தார்   நன்று
வாழையடி   வாழையாக   இருந்த   பண்பு
            வாரிவந்த    மழையாலே    தழைத்த   தின்று !

-ஆக்கம்-பாவலர்.கருமலைத்தமிழாழன்-

2ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.


அற்றார் அழிபசி தீர்க்க
அய்யன் திருவள்ளுவர்
ஓடி வந்தார் !

அட்சயப் பாத்திரமேந்திய
மணிமேகலா தெய்வங்கள்
மனித உருவெடுத்து
மாநகர வெள்ளத்தின்
துயர் துடைத்தனர் !

பாலென அழுவோர்க்கு
பால் தருவோம் பசுங்
கூழென வருவோர்க்கு
சோறிடுவோமென்று
கண்ணதாசர்கள்
கடைவிரித்தனர் !

தனி மனிதனுக்கு
உணவில்லையோ என்று
பாரதிகள்
உணவு சமைத்து
ஓடி வந்தனர் !

தமிழ்நாடே
தலைநகர் நோக்கி
விரைந்தது !

விண்ணிலிருந்து
உணவு மழை
வீடு தேடிப்
பொழிந்தது !

மண்ணில் வந்து
தரை தட்டிய கப்பல்
மாநகரின்
பசி தீர்த்தது !

வெள்ளம் வடியுமுன்னே
மக்களின் வேதனை வடிய
உள்ளங்கள் கோடி
துடித்தன !

மனிதாபிமானம் வென்றதை
மனிதம் பூத்ததை
தமிழ் நிலம்
தரணிக்கு உணர்த்தியது !
 -ஆக்கம்-திரு. வேல் முருகன்-
3ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.

அடைமழையா? கடல்நடுவே தவித்தோம்வாழ்வே, 
அழிந்ததுவோ நீளுமதோ யாரே கண்டார்?
கடையெதுவோகலமதுவோஎல்லாம் நீரே!
கால்தழுவி பாலென்றால் பன்னூ  றென்றார்!



முகமதியர் கடையதனில் கடுகும் தீண்டா :
முக்காடு இட்டகுல இனமே வேண்டா :
பகைமையினை கெடுமதிகள் கக்கும் போழ்தில்
பண்போடு பிரசவித்தார் : பிணஞ்சு  மந்தார்!



கழுத்தளவு தண்ணீரில் உண(ர்)வை தந்தார் :
கண்ணீரில் நனைக்கின்றோம் உந்தன் தாளை!
எழுத்தளவு ஏடளவு எதுவும் போறா!
எம்முயிரை காத்தவரை மனதிற் கொள்ளின்!


ஏசுவல்லா ஈசனவன் எதிரில் கண்டோம்!
எம்மெதிரே தம்முயிரை தூசாய் கொண்டோர்!
தூசுவல்லோ பிறன்பொருளில் தம்பேர் காண்போர்
துயரற்று  வாழுகிறார் இவரைக்  கொண்டே! 

-ஆக்கம்-ப.தமிழ்வாணன்-

வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசு பொருட்கள் தபால் வழி மிக விரைவில் வந்தடையும் என்பதை மிக்க மகிழ்வாக அறியத்தருகிறோம்

சித்திரை வருடப்பிறப்புக்கான போட்டி மிக விரைவில் அறிவிக்கப்படும்......


-நன்றி-
-அன்புடன்-
-ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற அமைப்பாளர்
கவிஞர்.த.ரூபன்-