புதன், 28 அக்டோபர், 2015

போட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்?


ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டி முடிவு நாள் நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு நாள்கள் இருக்கையில், போட்டிக்குப் பதிவு எழுதி அனுப்பாதோர் இருப்பின் போட்டியில் பங்கெடுக்கச் சில தகவல் தர விரும்புகின்றேன்.


மேலேயுள்ள நூறு உரூபாய்த் தாள் தான் கவிதைக்கான கருப்பொருள். இந்த நூறு உரூபாய்த் தாளை வைத்து நான் புனைந்த துளிப்பாவைப் (ஹைக்கூவைப்) பாருங்கள்.

அழகான நூறு உரூபாய்த் தாளில்
ஒளிந்திருக்கும் ஓர் உண்மையைப் பார்
"தொழிலாளர்களின் வியர்வை!"

நானொரு கவிதை புனைந்து காட்டிவிட்டேன். இனி உங்கள் புனைவுக் (கற்பனைக்) குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுங்களேன். உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பாவாகப்/ கவிதையாகப் புனைந்து இரண்டு நாட்களில் அனுப்பிவையுங்களேன்.

நானொரு சின்னப்பொடியன் இப்படியொரு துளிப்பாவைப் (ஹைக்கூவைப்) புனையலாம் என்றால், என்னைவிடப் பெரிய அறிஞர்களாகிய உங்களால் எத்தனை எத்தனை பெரிய பாடல்களை / காவியங்களை புனைய முடியுமே! எனவே தான், ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்குமாறு பணிவோடு அழைக்கின்றேன். போட்டி பற்றிய முழு விரிப்பையும் அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

போட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்?
நல்ல கேள்வி தான்.

போட்டிகளில் பங்கெடுத்தால் எமது பதிவோடு மற்றைய அறிஞர்களின் பதிவுகளை ஒப்பிட முடிகிறது. அதனால் எமது புனைவுத் (கற்பனைத்) திறன் எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. மேலும் அடுத்த பதிவுகளில் எமது புனைவுத் (கற்பனைத்) திறனைப் பல மடங்கு பெருக்கிச் சிறந்த பதிவுகளை ஆக்க முடியுமே! எனவே, உடனடியாக ஊற்று... தீபாவளி நாளை ஒட்டி நடாத்தும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்குமாறு பணிவோடு அழைக்கின்றேன். 
இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள் உறவுகளே! 

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

2015 தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாடாத்தப்படும் கவிதைப் போட்டிக்குத் தயாரா?

வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்றாக விளங்கும் 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2015 தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாடாத்தப்படும் கவிதைப் போட்டிக்குத் தயாரா?

எளிமையான போட்டி, படம் ஒன்று தரப்படுகிறது. படத்தைப் பார்த்ததும் உங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பதினைந்து வரிகளில் கவிதை ஆக்கி அனுப்பினால் போதுமே! போட்டி பற்றிய விரிப்புகளை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

போட்டி பற்றிய மேலதிகத் தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இத்தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இப்போட்டியினைத் தெரிவித்து அவர்களையும் இப்போட்டியில் பங்கெடுக்கச் செய்யுங்கள். அதற்கு உதவியாக கீழ்வரும் நிரலை (Code) உங்கள் தள விட்ஜட்டாக அமைக்கலாம்.

<a href="http://ootru1.blogspot.com/2015/09/2015.html" target="_blank" title="த&#3008;ப&#3006;வள&#3007;த&#3021; த&#3007;ர&#3009;ந&#3006;ள&#3016; ம&#3009;ன&#3021;ன&#3007;ட&#3021;ட&#3009; உலகம&#3021; தழ&#3009;வ&#3007;ய ம&#3006; ப&#3014;ர&#3009;ம&#3021; கவ&#3007;த&#3016;ப&#3021; ப&#3019;ட&#3021;ட&#3007;-2015"> <img height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdtK9igfJFvHWa9wyaAiXwQVttGxFa9XM3PB45m7UKRXNn_QIkA2sHZhGe8zPHdWC7H0RWMwGtXYLjgzO2l2G9kWA3NoRwlCyqSkDLWF0JJVwwLobpllPrzCLczIKWmfcL10lGeF1aeyc/s640/Untitledkl-1+copy.jpg" width="200" /></a> மேற்படி நிரலில் (Code), படத்தின் அளவைப் பெரிதாக்க width="200" height="160" ஆகியவற்றின் பெறுதிகளைப் பெரிதாக்கலாம்.
 
எல்லா வகைத் தொடர்புகளுக்கும் ootru2@gmail.com என்ற மின்னஞ்சலைப் பாவிக்கவும்.


படத்தைப் பார்த்துப் பாப்புனைவதில் பட்டறிவு தேவைப்படின் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம். http://www.ypvnpubs.com/2015/10/blog-post_5.html

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெரும் கவிதைப் போட்டி-2015



ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-31-10-2015 இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள நாணயத்தை தோ்வு செய்து அதற்கான 15வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com
நடுவர்கள்
1.கவிஞர்-ரமணி ஐயா -இந்தியா
2.வலைச்சித்தர்.திரு.தனபாலன்- இந்தியா
3.திரு.யாழ்பாவாணன்-இலங்கை.
4.கவிஞர் .ரூபன்-மலேசியா


முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-